போட்ரா வெடியை.. அடிடா தாரை தப்பட்டையை.. சூரரைப் போற்று டீசர்.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை : திரையரங்கில் வெளியிட்ட சூரரைப்போற்று படத்தின் டீசரை, தாரை தப்பட்டைகள் முழங்க , ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து ரசிகர்கள் பார்த்தனர். நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் சூரரைப்போற்று இந்த படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கார இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீசர் ஜனவரி 7 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து ரசிகர்களுக்காக டீசர் இணையத்தில் வெளியாவதற்கு முன் போரூரில் உள்ள ஜி.கே.சினிமாஸில் திரையிடப்பட்டது. இதற்கு வந்த சூர்யா ரசிகர்கள் தாரை தப்படையுடன் திரையரங்கு வந்து தங்களின் ஆட்டங்களை துவங்கினர். அதை தாண்டி பட்டாசுகள் வெடித்தும் கலர் பூசி திரையரங்கிற்கு டீசரை பார்க்க சென்றனர் .

அதே போல முதலில் திரையரங்குகளில் நுழைந்தவுடன் சூர்யா ரசிகர்களின் ஆரவாரங்களை கட்டுப்படுத்த முடியவில்லை அவர்களின் உற்சாகத்தை மெருக்கேற்ற முதலில் சூர்யாவின் மேஸ்அப்புகள் போடப்பட்டது அதன் பின் கடைசியாக சூரரைபோற்று படத்தின் டீசர் போடப்பட்டது.