சென்னை : நான் சிரித்தால் டிரைலரை, ரொம்ப எஞ்சாய் பண்ணி பார்த்து சிரித்ததாக தளபதி விஜய் கூறியுள்ளார். இந்த தகவலை திங்க் மியூசிக் இந்தியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்து இருக்கிறார்.
இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது முதல் ஒரு சலசலப்பு சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டது. அது என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் இருக்கும் தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஏற்படுத்தியது தான். இந்த படத்தின் கதை கரு என்னனா, சிரிப்பு நோயால் பாதிக்கபட்டிருக்கும் கதாநாயகன் ஆதி என்ன என்ன பிரச்சினைகளுக்கு ஆளாகுகிறான் என்பது தான் . இந்த முன்னோட்டத்தில் ஒரு காட்சியில் திரையரங்கில் விஜயின் படத்தை பார்த்து கொண்டு இருப்பார் ஆதி அந்த காட்சியில் மிக அழுத படி விஜய் நடித்து கொண்டு இருப்பார் அப்போது ஆதி தன் நோய் காரணமாக சிரிப்பார் அதே போல மற்றொரு காட்சியில் அஜித் பட சீன் இருக்கும் அதே போல அதைப்பார்த்தும் சிரிப்பார் .