அவங்க எந்த தைரியத்துல ஆட்சியமைக்க முடியும்னு சொல்றாங்கன்னு தெரியல : சிவசேனாவை சாடிய சரத் பவார்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு, தங்கள் வசம் 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதென்று சிவசேனா எதனடிப்படையில் கூறி வருகிறது எனத் தெரியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கலாய்த்துள்ளார்


மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள், கடந்த வாரம் மீண்டும் நடைபெற்றன.

இதனை உறுதி செய்யும் விதமாக, மூன்று கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சில தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்றது.

சிவசேனாவோட பேசி ஒரு முடிவுக்கு வந்திடுச்சாம் காங்கிரஸ் ! இனியாவது ஆட்சி அமைப்பாங்களா?

அந்தக் கூட்டத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதன் அடையாளமாக, குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது; இதுதொடர்பாக மூன்று கட்சிகளின் தலைவர்கள் இறுதி முடிவு எடுத்த பின்பு, மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக, ஆளுநரை மீண்டும் சந்தித்து உரிமைக் கோரப்படும் என தகவல்கள் வெளியாகின.