மாபெரும் வேலைவாய்ப்பு! CBSE கல்வி வாரியத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என பல்வேறு பணிகள்

Central Board of Secondary Education CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில், நவம்பர் 15 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.


அதன்படி, அசிஸ்டெண்ட் செக்ரட்டரி, அனாலிஸ்ட், ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர், சீனியர் அசிஸ்டெண்ட், ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோகிராபர், அக்கவுண்டண்ட் ஆகியவற்றில் உள்ள சுமார் 357 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவைகள் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என பிரிக்கப்படுகிறது.